பக்கம்:கம்பன் கலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கம்பன் கண்ட அறம் இத் தமிழ் மொழியில் பெரிய நூல்கள் இயற்றிய அனைவரும் அறத்தை அடிப்படையில் கொண்டே இயற்றினர். அடிப்படையான பயன் ஒன்றையும் கருதாமல் ஓர் இலக்கியத்தை இயற்றுவதைப் பெருந்தவறு என்றே கருதினார். பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட் பதடி எனல் என்ற அறவுரை தோன்றிய ஒரு நாட்டில், அடிப்படையான பயன் ஒன்றும் இல்லாமல் ஓர் இலக்கியம் தோன்றுதல் என்பதே இயலாத காரியம். அவ்வாறு தோன்றினாலும் அது நிலைத்து வாழாது. படித்து இன்பம் அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இலக்கியங்கள் ஏனைய மொழிகளில் தோன்றின; தோன்றுகின்றன. அந்நாட்டு இலக்கியத் திறனாய்வாளர், அதனால் தவறு ஒன்றும் இல்லையென்றே கருதுகின்றனர். என்றாலும் தமிழ் நாட்டில் இந்நிலை அன்று இல்லை. அதிலும் கம்பனைப்போல் பெருங்காப்பியம் பாடியவர்கள நினைத்தும் பார்க்க முடியாத ஒரு காரியம் இது. தான் இயற்றிய பெருங் காப்பியத்திலே வேறு ஒரு பயனையும் கருதாமல் ஒரு சிலர் அதனைப் படிக்கும் பொழுது உண்டாகும் இன்பம் ஒன்றையே கருதிக் கற்பர் என்பதை அவன் கனவிலும் கருதியிருக்க மாட்டான். இழந்த சுவர்க்கம் பாடிய மில்ட்டன், உலகம் உள்ளளவும் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/95&oldid=770836" இலிருந்து மீள்விக்கப்பட்டது