பக்கம்:கம்பன் கலை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட அறம் 87 தனிப்பட்டவன் அறங்கள், சமுதாய அறங்கள் என்று இவற்றைக் கூறலாம். இவை இரண்டையுமே கம்பநாடன் தன்னுடைய பெருங்காப்பியத்தில் பரக்கப் பேசுகின்றான். தனிப்பட்டவன் மேற்கொள்ள வேண்டிய அறங்கள் அவனவன் நிலைக்கும், மேற்கொண்ட வாழ்க்கைக்கும் ஏற்ப ஒவ்வொருவனுக்கும் அமைந்திருக்கும். உதாரண மாகப் பரதனை எடுத்துக் கொள்ளலாம். "தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளம்" என்று விசுவாமித்திர முனிவன் பரதனைக் குறிப்பிடுகின்றான். நீக்க முடியாத அறங்கள் அனைத்தும் சென்று விழும் கடல் போன்றவன்' என்ற பொருளில் பேசுகின்றான். எனவே, தனிப்பட்டவன் மேற்கொள்ள வேண்டிய அறங்கள் அனைத்தையும் பரதன் தாங்கி நிற்கின்றான், பரதனைப் பொறுத்தமட்டும் சில இடர்ப்பாடுகளை அடைகின்றான். அவனுடைய வாழ்க்கையில் அவன் மேற்கொண்டுள்ள தனி மனிதன் அறமும், அரச குமாரனாகப் பிறந்து விட்டமையின் மேற்கொள்ள வேண்டிய அரச அறமும் முரண்படுகின்றன. இந்நிலையில் எது சிறந்தது என்பதை அவனே ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகின்றான். அரசன் கொடுத்த வரங் காரணமாக அயோத்தி அரசை அவனுடைய தாய் அவனுக்காகப் பெற்று வைத்தாள். வசிட்டன் முதலிய முனிவருங்கூட அவன் அரசை மேற்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. என்றே கருதுகின்றனர். அரசன் இல்லாத நாடு கண் இல்லாத மனிதனையே ஒக்கும். எனவே, தசரதன் இறந்து, இராமன் காடு சென்றுவிட்டமையின் ஆட்சியைப் பரதன் மேற்கொள்வது முறைதான் என்று அரச அறம் கூறுகின்றது. இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/97&oldid=770838" இலிருந்து மீள்விக்கப்பட்டது