பக்கம்:கம்பன் கலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட அறம் 89 இதே போன்று சமுதாய அறங்களையும் விரிவாகப் பேசுகின்றான். சமுதாயத்தில் தனி மனிதன் பல உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. சமுதாயத்தில் வாழும் எந்த மனிதனும் பிறன் ஒருவனுடைய மனைவியை விரும்புவது அறத்திற்கு முரண்பட்ட ஒன்றாகும். பிறன் மனைவியை விரும்புவது தனி மனிதனுடைய பண்பாட்டிற்கு விரோதமானது என்பது ஒருபுறம் இருக்க, இச்செயல் நடைபெறுவதானால் சமுதாயம் நன்கு நிலைபெற முடியாது. பிறன் மனைவியை விரும்புகின்றவன் அரசனாயினும் ஆண்டியாயினும் ஒன்றுதான். மன்னர்க்கு நீதி ஒருவகை, ஏனை மாந்தர்க்கு நீதி ஒருவகை என்ற வியாழ முனிவன் சட்டம் இங்குச் செல்லாது. இப்பெரிய அறத்தை நன்கு வலியுறுத்தவே இராம காதை எழுந்தது. இந்த அறத்திற்கு மாறாக மற்றோர். உதாரணம் இராமகாதையில் இடம பெறுவது பொருத்தமற்ற ஒன்று. என்றாலும், வான்மீகி இராமாயணத்தில் இவ்வாறு ஒர் இடம் வரத்தான் செய்கிறது. வாலியின் மனைவியாகிய தாரை அவன் இறந்தபிறகு ஆட்சிக்குவந்த சுக்கிரீவனுடன் சென்று' வாழ்க்கை நடத்துகின்றாள். - குரங்குகளின் வாழ்க்கையில் மனிதர்களுடைய அறங்களை வைத்துப் பார்க்க வேண்டிய இன்றியமை யாமை இல்லை என்று இதற்கு அமைதி கூறிவிடலாம். ஆனாலும், அந்தக் குரங்குடன் காப்பியத்தலைவன் நட்புக் கொள்கின்றான்; தம்பி முறையும் கொண்டாடுகின்றான். எனவே, அறத்தின் ஆணிவேராக உள்ள இராமனுடன் தம்பி முறை ஏற்கின்ற சுக்கிரீவன் இத்தகைய பெருந் தவற்றைச் செய்கின்றான் என்று கூறுதல் பெருந்தவறு. ஒரே வரலாற்றில் இத்துணை முரண்பட்ட நிகழ்ச்சிகள் வருவது எவ்வளவு பொருத்தமற்றது! பிறன் மனைவியை விரும்பிய காரணத்தால் இராவணன் உயிரையே இழந்தான். ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/99&oldid=770840" இலிருந்து மீள்விக்கப்பட்டது