பக்கம்:கம்பன் கவித் திரட்டு-2-3.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை


4 புவியினுக்கு அணியாய் . பூமிக்கு ஒர் அலங்காரமாய் : ஆன்ற பொருள் தந்து - சிறந்த பொருள்களைக் கொடுத்து: புலத் திற்கு ஆகி - நிலத்திற்கு உரியதாகி; அவி அகத் துறைகள் தாங்கி - நீராடுதற்குரிய துறைகள் உள்ளனவாய்; ஐந்திணை நெறி அளாவி . குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்கள் வழி சேர்ந்து; சவி உறத் தெளிந்து - செவ்வையாகத் தெளிந்து; தண் என்று ஒழுக்கம் தழுவி - குளிர்ந்த நல்ல ஒழுக்கம் கொண்டு: சான்றோர் கவி என . பெரியோர் செய்த கவி போல; கிடந்த - இருந்த கோதாவரியை - கோதாவரி ஆற்றை: வீரர் கண்டார் . வீரர்களாகிய இராம லட்சுமணர் கண்டனர். கோதாவரி நதியைச் சான்றோர் கவிக்கு உவமை கூறு கிறார் கம்பர். எப்படி? புவியினுக்கு அணியாகி . பலவித அணிகள் பொருந்தியதாக விளங்கும் சான்றோர் கவி; உலகத்தினரால் கொண்டாடப்பெறும். ஆன்ற பொருள் தந்து - அறம் பொருள் இன்பம் வீடு என்ற சதுர்வித புருஷார்த்தங்களின் பெருமையை உணர்த்தும்; கற்பவருக்கு நுண் அறிவுபுகட்டும் - ஆராய்ச்சி செய்பவருக்கு மேலும் மேலும் புதியனவாகப் புலப்படத் தக்க பொருள் தரும். அவி அகத்துறைகள் தாங்கி - அகப்பொருள் இலக்கணங்கள் பொருந்தி இருக்கும். ஐந்திணை நெறி ஆளாவி . குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய புணர்தல், இருத்தல், பிரிதல், இரங்கல், ஊடல் எனும் ஐவகை ஒழுக்கங்களும் உள்ளதாக இருக்கும். சவி உறத் தெளிந்து மயங்க வைத்தல் என்ற குற்றத்துக்கு இடமில்லாமல் தெளிவாக நன்கு விளங்கச் சொல்லுதல என்ற அழகுடையதாக இருக்கும்.