பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

மார்பைத் துளைத்துக்கொண்டு பின்புறமாக வெளியேறிற்று. எதுபோல? கல்வி அறிவு இல்லாத அற்பர்களுக்கு நல்லோர் கூறிய நல்லுரை போல.

𝑥𝑥𝑥𝑥

கரிய செம்மல்—கரிய திருமேனி கொண்ட இராமன்; சொல் ஒக்கும்—முனிவர் தம் சாபச்சொல் போன்ற; கடிய வேகம்—மிக்க வேகமும்; சுடு–தவறாமல் சுட்டு அழிக்கும் தன்மையும் கொண்ட, சரம்–ஒரு கணையை; அல் ஒக்கும் நிறத்தினுள்–இருள் போலும் கரிய நிறங்கொண்டவளாகிய மேல் விடுதலும்—தாடகை மீது ஏவ; வயிரம் குன்றம் கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது—வைரம் பாய்ந்த மலையாகிய கல் போன்ற அவள் மார்பிலே பாய்ந்து அங்கே தங்கி விடாது; அப்புறம் கழன்று–பின்புறமாக உருவிக்கொண்டு; கல்லாப் புல்லர்க்கு—கல்வி அறிவு இல்லாத அற்பர்களுக்கு, நல்லோர்—நல்லவர்கள்; சொன்ன—எடுத்துக் கூறிய; பொருள் என – பொருள் செறிந்த சொற்களைப் போல; போயது—போய் விட்டது.

𝑥𝑥𝑥𝑥


பொன் நெடுங் குன்றம் அன்னான்
        புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங்கால வன் காற்று
        அடித்தலும் இடித்து வானில்
கல் நெடு மாரி பெய்யக்
        கடை எழுந்த மேகம்
மின்னொடும் அசனி யோடும்
        வீழ்வதே போல வீழ்ந்தாள்.

13