பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

குழந்தாய்; நின் திரு மரபு உளான் — உன்னுடைய புகழ் மிகு மரபில் தோன்றியவனும் ; அயோத்தி மா நகர் வாழ் — அயோத்தி மாநகரிலே வாழ்ந்தவனும்; விந்தை சேர்புயன் – வீரலட்சுமி தங்கிய புய வலியுடையவனுமாகிய; சகரன் — சகரன் என்ற அரசன்; இ மேதினி புரந்தான் — இப்புவியினை ஆண்டு வந்தான்;

𝑥𝑥𝑥𝑥

சகரனின் மனைவிமார் இருவர். மூத்தவள் விதர்ப்ப நாட்டு மன்னன் மகள்; விதர்ப்பை எனும் பெயர் கொண்டவள். எனினும் கேசினி என்பதே இவளது இயற்பெயர்.

இரண்டாவது மனைவியின் பெயர் சுமதி; காசியபருக்கும் வினதைக்கும் மகனாகப் பிறந்தவள்; கருடனுக்கு இளையவள்.

கேசினிக்கு ஒரு மகன். அவன் பெயர் அசமஞ்சன். அசமஞ்சன் சிறு குழந்தைகளைத் தூக்கிச் செல்வான்; ஆற்று நீரிலே அமிழ்த்துவான், குழந்தை தவித்துத் துடித்துச் சாதல் கண்டு இன்புறுவான். இது இவனுடைய விளையாட்டு.

இந்த அசமஞ்சனுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்சுமான் என்று பெயரிட்டான் அசமஞ்சன். அம்சுமான் என்றால் என்ன பொருள்? ஒளி மிக்கவன் என்று பொருள்.

சுமதிக்கு முட்டை வடிவில் ஒரு பிண்டம் பிறந்தது. அது வெடித்தது; அதினின்றும் அறுபதாயிரம் பிள்ளைகள் தோன்றினார்கள். அவர்கள் வீராதி வீரர்களாக விளங்கி வந்தனர்.