பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109


தன்‌ புதல்வர்‌ அறுபதாயிரம்‌ பேரும்‌ வீரர்களாக இருப்பதால்‌ எவ்வித இடையூறும்‌ இன்றி அசுவ மேதயாகம்‌ செய்யலாம்‌ என்று கருதினான்‌ சகரன்‌.

இதை அறிந்தான்‌ இந்திரன்‌, யாகக்‌ குதிரையைப்‌ பாதாள உலகில்‌ கொண்டு போய்விட்டான்‌. அங்கே தவம்‌ செய்து கொண்டிருந்தார்‌ கபிலர்‌, அவர்‌ பின்னே குதிரையை ஒளித்து வவத்தாள்‌ இந்திரன்‌.

கபிலர்‌ கண்‌ விழிக்கும்போது முன்‌ நிற்பவர்‌ எவரோ அவர்‌ வெந்து, சாம்பராவர்‌, இதை அறிந்தே குதிரையை அவர்‌ பின்‌ நிறுத்தினான்‌ இந்திரன்‌.

குதிரையைத்‌ தேடிக்கொண்டு சகரபுத்திரர்‌ அறுபது ஆயிரம்‌ பேரும்‌ பாதாள உலகம்‌ செல்வர்‌, அங்கே கபில முனிவர்‌ பின்னே குதிரையைக்‌ காண்பர்‌. கபிலரின்‌ தவத்துக்கு இடையூறு செய்வர்‌. கபிலர்‌ கண்‌ விழிப்பர்‌, எதிரேநிற்கும்‌ சகரபுத்திரர்‌ அறுபதாயிரம்‌ பேரும்‌ வெந்து சாம்பராவர்‌.

இவ்வாறு திட்டமிட்டுத்தான்‌ இந்திரன்‌ யாகக்‌ குதிரையை அங்கே கொண்டு போய்‌ நிறுத்தினான்‌. இந்திரன்‌ திட்டமிட்டபடியே நடந்தது.

யாகக்‌ குதிரையை எங்கும்‌ தேடினர்‌ சகரனின்‌ புதல்வர்‌. எங்கும்‌ கண்டிலர்‌, பூமியைக்‌ குடைந்தனர்‌. பாதாள உலகு சென்றனர்‌.

அங்கே கபிலர்‌ அருகே குதிரை நிற்றல்‌ கண்டனர்‌. முனிவர்‌ முன்‌ ஆரவாரம்‌ செய்தனர்‌.

தவம்‌ கலையப்‌ பெற்றார்‌. முனிவர்‌. கண்‌ விழித்தார்‌. அந்தக்‌ கணமே அறுபதாயிரம்‌ பேரும்‌ வெந்து சாம்பராயினார்‌.