பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112


‘தான்‌ அரும்‌ பாடுபட்டு கொண்டு வந்த கங்கை நீர்‌ சிவபெருமான்‌ முடியில்‌ தங்கி விட்டமை கண்டான்‌ பகீரதன்‌. சிவ பெருமானை வேண்டினான்‌, அவரும்‌ அவன்‌ வேண்டுதலுக்கு இரங்கினார்‌. சிறிது வெளியில்‌ விட்டார்‌.’

‘வேகமாக ஓடிவந்தாள்‌ கங்கை, ஜான்ஹு என்ற முனிவரின்‌ ஆசிரமத்தைப்‌ பாழாக்கினாள்‌. முனிவர்‌ கோபம்‌ கொண்டார்‌. கங்கையைத்‌ தம்‌ உள்ளங்கையில்‌ அடக்கிக்‌ குடித்து விட்டார்‌.’

‘கண்டான்‌ பகீரதன்‌. முனிவரை வேண்டினாள்‌. அந்த வேண்டுதலுக்கு இரங்கினார்‌ முனிவர்‌. தம்‌ காது வழியே கங்கையை விட்டார்‌.’

‘அந்த நீரால்‌ தனது முன்னோரை உய்வித்தான்‌ பகீரதன்‌. மீண்டும்‌ அயோத்திக்கு. வந்தான்‌. ஆட்சி புரியத்‌ தொடங்கினான்‌.’

𝑥𝑥𝑥𝑥

ண்ட கோளகைக்கு
        அப்புறத்‌ தாதி அன்று அளந்த
புண்டரீக மென்மலரிடைப்‌
        பிறந்து பூ மகனார்‌
கொண்ட தீர்த்தமாய்‌ பகீரதன்‌
        தவத்தினால்‌ கொணர
மண்டலத்தின்‌ வந்து அடைந்தது
        இம்‌ மாநதி மைந்த !