பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

முனிவன் தன் ஆசிரமத்திலிருந்து வெளியே போகுமாறு செய்தான். முனிவன் உருக் கொண்டான்; அகலிகையை அடைந்தான்.

வெளியே சென்ற முனிவர் திரும்பினார். இந்திரனின் சூழ்ச்சி அறிந்தார். கோபம் கொண்டார். சபித்தார். கல் உருக் கொண்டாள் முனிபத்தினி. உனது கால் தூசி படவே மீண்டும் பெண் உருக் கொண்டாள்.’

இவ்வாறு அகலிகை சாபம் பெற்ற கதையைக் கூறி விட்டு இராமனைத் துதிக்கிறார் முனிவர்.

𝑥𝑥𝑥𝑥


வ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
       இனி இந்த உலகுக்க எல்லாம்
உய் வண்ணம் அன்றி மற்று ஓர்
       துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில்
       மழை வண்ணத்து அண்ணலே நின்
கை வண்ணம் அங்கு கண்டேன்
       கால் வண்ணம் இங்கு கண்டேன்

‘முகில் வண்ணா! இருள் நிற மேனியளாகிய அந்தத் தாடகையைக் கொன்றாயே! அப்போது உனது கைத்திறம் கண்டேன். இங்கே ஒரு கல்லைப் பெண்ணாக்கிய நின் திருவடிப் பெருமை கண்டேன். இனி இந்த உலகு உய்யும் வழி பிறந்தது. துன்பமே இல்லை.

𝑥𝑥𝑥𝑥