பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

மிதிலை மா நகரின் கோட்டை வாசலிலே கொடிகள் பறக்கின்றன. அந்தக் காட்சி எப்படியிருக்கிறது ? மிதிலை நகர் தனது கைகளை நீட்டி நீட்டி அழைப்பது போலிருக்கிறதாம். யாரை ? செந்தாமரைக் கண்ணனாகிய இராமனை; என்ன சொல்லி அழைக்கிறது ?

"நான் செய்த தவத்தினாலே லட்சுமி தேவியானவள் தனது இருப்பிடமாகிய தாமரையை விட்டு இங்கே வந்து இருககிறாள். ஆகவே நீ விரைவில் வா விரைவில் வா;" என்று கூறி அழைப்பது போல் இருக்கிறதாம்.

XXXX

அந்தக் கடிநகர்-மிதிலை எனப்படும் அச் சிறந்த நகரமானது ; யான் செய் மாதவததின் - நான் செய்த பெருந்தவத்தினால; செய்யவள்-திருமகள் : மையறு மலரின நீங்கி-குற்ற மற்ற தனது இருப்பிடமாகிய தாமரை மலரைவிட்டு ; வந்து இருந்தாள்-இங்கே வந்து இருக்கிறாள் என்று என்று கூறி ; கமலம் செங்கண் ஐயனை-செந்தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடைய இராமனை ; செழுமணி-வளம் மிகு மணிகள் கட்டப் பெற்ற; கொடிகள் என்று சொல்லப்படுகிற தன் கைகளை நீட்டி; ஒல்லை வா என்று-விரைவில் வருக என்று சொல்லி; அழைப்பது போன்றது-அழைப்பது போல் இருந்தது.

XXXX

ண்டுதல் இன்றி ஒன்றித்
       ::தலைத்தலை சிறந்த காதல்
உண்ட பின் கலவிப் போரில்
       ::ஒசிந்த மெல் மகளிரே போல்