பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123


பண்தரு கிளவியார் தம்
       புலவியில் பரிந்த கோதை
வண்டொடு கிடந்து தேன்சோர்
       மணி நெடுந் தெருவில் சென்றார்.

காதலர் இருவர். ஒத்த மனம். ஆண் எப்படியோ அப்படியே பெண். பின்னிய காதலர். தடுப்பார் எவரும் இலர். பின் கேட்க வேண்டுமா? கலவியில் ஈடுபடுகின்றனர். இன்பம் நுகர்கின்றனர். பன்முறை யுண்டபின் துவண்டு விடுகிறாள் பெண்.

மனம் கமழும் மாலை; தேன் கசியும் மலர், வண்டு மொய்க்கும் மலர். கலவியின்பத்துக்கு இடையூறாக இருந்த அம்மலர் மாலையைக் கழற்றி எறிகிறாள் அவள்; தேன் கசியவும், வண்டு மொய்க்கவும் துவண்டு கிடக்கிறது அம்மலர் மாலை, அவளைப் போலவே தெருவில் துவண்டு கிடக்கிறது. அந்தத் தெருவழியே மூவரும் சென்றனர்.

𝑥𝑥𝑥𝑥

தலைத் தலை சிறந்த காதல்–ஆண் பெண் ஆகிய இரு பாலரிடத்தும்; மேம்பட்ட காதலிலே ; தண்டுதல் இன்றி ஒன்றி – தடை ஏதும் இல்லாதபடி இருவரும் கலந்து ; உண்டபின் – காம இன்பத்தை இருவரும் நுகர்ந்த பின்பு ; கலவிப் போரில் ஏசித்த – அந்தக் கலவி மயக்கத்தினாலே துவண்டு விட்ட மெல் மகளிரே போல்—மெல்லிய இயல்பு கொண்ட பெண்களைப் போலவே, பண்தரு கிளவியார் – இசை போலும் இனிய மொழியினராகிய அப் பெண்கள் ; தம் புலவியில்—தங்களுடைய புணர்ச்சிக் காலத்திலே பரிந்த கோதை – கழற்றி எறிந்த மலர் மாலைகள்; வண்டொடு கிடந்து – தம்மில் மொய்த்த வண்டுகளுடனே வாடிக் கிடந்து ; தேன்