பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

சோர்—தேன் சிந்திய; மணி நெடு தெருவில் – அழகிய நீண்ட தெருக்களிலே; சென்றார் – நடந்து சென்றார்கள்.

𝑥𝑥𝑥𝑥


பொன்னின் சோதி போதின்
      இன் நாற்றம் பொலிவே போல்
தென் உண் தேனில் தீஞ்சுவை
      செஞ் சொல் கவி இன்பம்
கன்னிம் மாடத்து உம்பரின்
      மாடே களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு
      அங்கு அயல் நின்றார்
.

அங்கே ஒரு கன்னிமாடம். அதன் முன்னே ஒரு நீர்த்துறை; அதிலே ஆண் அன்னங்கள் தங்கள் பெடையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கன்னிமாடத்திலேதான் சீதா தேவி இருக்கிறாள் எப்படி இருக்கிறாள் ? பொன்போலும் ஒளி வீசிய மேனியுடனிருக்கிறாள் ; தேனின் இனிய சுவை போலிருக்கிறாள். பூவின் நறுமணம் போல் இருக்கிறாள் ; நல்லதொரு கவியின் சொல் இன்பம் போல விளங்குகிறாள்.

இந்தக் கன்னிமாடத்தின் அருகே மூவரும் நின்றனர்.

𝑥𝑥𝑥𝑥

பொன்னின் சோதி—செம் பொன்னின் பேரொளியும்; போதின இன்நாற்றம் மலரின் நறுமணமும் ; தேன் உண் தேனில் தீம்சுவை – தேன் வண்டுகள் உண்ணும் தேனில் உள்ள இனிய சுவையும் ; செம் சொல்—சிறந்த சொற்களால்