பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126


பொன் சேர் – அழகிய; மென்கால்—மென்மையான கால்களிலே; கிண்கிணி சதங்கைகளும்; மார்பம் புனை—மார்பிலே அணிந்த; ஆரம்–மணி மாலைகளும், மலர் மாலைகளும்; கொன்சேர் அல் குல்–பெருமை மிக்க இடையிலே மேகலை–மேகலா பரணமும்; தாங்கும்–அணிந்த கொடி அன்னார்—பூங்கொடி போன்ற தோழிமார் பலர்; (சூழ்ந்து) தன் சேர் கோலத்து என் ஏழில் காண—இயற்கையாகவே தனக்குள்ள அழகினை வியந்து பாராட்ட; சத கோடி மின் சேவிக்க–அளவற்ற மின்னல் கொடிகள் (தன் மேனி ஒளி கண்டு வணங்க) மின் அரசு என்னும்படி–மின்னல்களின் அரசு என்று சொல்லும்படியாக; நின்றாள்–மாடத்து மேல் நின்றாள் சீதை).

𝑥𝑥𝑥𝑥

பெருந் தேனின் சொல் பெண் இவள்
       ஒப்பாள் ஒரு பெண்ணைத்
தருந்தான் என்றால் நான்முகன்
       இன்னும் தரல் ஆமோ
அருந்தா அந்தத் தேவர்
       இரந்தால் அமுது என்னும்
மருந்தே அல்லாது என் இனி
       நல்கும் மணி ஆழி.

திருப்பாற்கடலிலே தோன்றிய திருமகள் இங்கே இருக்கிறாள். அங்ஙனம் இருக்க இவள் போலும் பெண் ஒருத்தியைத் தருமாறு அந்தத் திருப்பாற் கடலிடம் கேட்டால் அது அளிக்குமோ ? அளியாது. அமுதம் தான் அளிக்கும். சரி. படைத்தல் வல்ல பிரமதேவனிடம் சென்று இவள் போலும் பெண் ஒருத்தியைப் படைத்துத் தருமாறு