பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

மதர்க்கும் விழியாள் அவன். அந்த விழியிடத்தே வேல் தோற்கும்; கூற்றுவனும் தோற்பான், வேலும், கூற்றும் சென்று கொல்லும். ஆனால் இவளது விழிகளே இருந்த இடத்திலிருந்தே கொல்லும்.

அவள் நின்ற நிலையைச் சொற்களால் விவரிக்க இயலாது.

𝑥𝑥𝑥𝑥

கொல்லும் வேலும் – கொல்கின்ற வேலாயுதமும் ; கூற்றமும் — யமனும் ; இவை எல்லாம் — ஆகிய இவை எல்லாவற்றையும் ; வெல்லும் வெல்லும் என்ன – வென்றே தீரும் என்று சொல்லும் படியான ; மதர்க்கும் விழி கொண்டாள் — ஆழ்ந்து அகன்று பரந்த விழியுடையவளும்; பெண் கனி — பென்மை நலன் யாவும் கனியப் பெற்றவளும் (ஆன சீதை); குன்றும்—தொலைவில் உள்ள மலையும்; சுவரும்—அணித்தே மாளிகையில் உள்ள சுவரும் ; திண் கல்லும் — வலிய கருங்கல்லும் புல்லும் — மெல்லிய புல்லும்; கண்டு உருக — அவள் அழகையும், நிற்கும் நிலையின் சிறப்பையும் கண்டு நெகிழ; நின்றாள்—ஓரிடத்தில் வந்து நின்றாள் ; அது—அவள் நின்ற நிலையின் சிறப்பு ; சொல்லும் தன்மைத்து அன்று — சொற்களால் விவரிக்க இயலாதது.

𝑥𝑥𝑥𝑥

ண் அரும் நலத்தினாள்
       இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி
       ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது
       உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்
       அவளும் நோக்கினாள்.