பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

“இந்தா! பெற்றுக்கொள்” என்று கூறித்தானே முன் வந்து தாரை வார்த்துக் கொடுத்திருக்க வேண்டும். அங்ஙனம் இன்றி இந்தச் சிவதனுசைக் கொண்டுவந்து நாணேற்றுமாறு இச்சிறு பிள்ளை முன் வைபபது அறிவீனம்.

இவ்வாறு மிதிலை வாழ் மகளிர் சிலர் பேசிக்கொண்டனராம்.

𝑥𝑥𝑥𝑥

வள்ளல்—கொடை வள்ளலாகிய ஜனகன்; மணத்தை—சீதைக்குத் திருமணம் செய்து காண; மகிழ்ந்தனன்—விரும்பி மகிழ்ந்தான் ; என்றால் — என்று சொன்னால் ; கொள்—இந்தா பெற்றுக்கொள் என—என்று ; முன்தானே முன் வந்து; கொடுப்பதை அல்லால்—தாரை வார்த்துக் கொடுப்பது அன்றி ; வெள்ளம் அணைத்தவன்—வெள்ளம் அணைத்த சிவனுடைய ; வில்லை எடுத்து—வில்லைக்கொண்டு வந்து; இப்பிள்ளை முன் இட்டது – நாணேற்றுமாறு இச்சிறு பிள்ளை முன் வைத்தது ; பேதைமை — அறிவினம் ; என்பார் — என்று பேசிக் கொள்வார்.

𝑥𝑥𝑥𝑥

‘ஞான முனிக் கொரு
       நாண் இலை’ என்பார்
‘கோன் இவனில்
       கொடி யோர் இலை’ என்பார்
‘மானவன் இச்சிலை
       கால் வளையானேல்
பீன தனத்தவள்
       பேறிலள்’ என்பார்