பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132


பெண்கள் எல்லாரும் இப்படித் தங்கள் மனம் போனவாறு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இராமன் என்ன செய்தான் ? மேருமலையும், ஆண் யானையும், ரிஷபமும் சிங்கமும் நாணமடையும் படியாக நடந்து வில் இருந்த இடம் சென்றான். முனிவர் ஆசி கூறினர். தேவர்கள் மகிழ்ந்தார்கள்.

xxxx

தோகையர்—மயில்போலும் சாயல் கொண்ட பெண்கள்; இன்னன சொல்லிட– இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்க; (எழுந்து நின்ற இராமன்) நல்லோர் — சாதுக்களாகிய முனிவர்கள்; ஓகை விளம்பிட—மகிழ்ச்சியால் ஆசி மொழிகள் கூறவும்; உம்பர் உவப்ப – தேவர்கள் மகிழவும்; மாகம் மடங்கலும் —மிக்க சிறப்புடைய ஆண் சிங்கமும். மால் விடையும் – பெருமை மிக்க ரிஷபமும்; பொன் நாகமும் — பொன் மலையாகிய மேருவும்; நாகமும் – யானையும்; நாண — தன் நடை தோற்றது கண்டு நாண நடந்தான்—வில் அருகே நடந்து சென்றான்.

xxxx


டுத்து இமையால்
        இருந்தவர் தாளின்
மடுத்தும் நாண் நுதி
        வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும்
        அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டார்
        இற்றது கேட்டார்.

இந்த இளங்குமரன் என்ன செய்வானோ என்ற வியப்புடன் கண் இமையாமல் இராமனையே நோக்கிய வண்ணம் இருந்தார்கள். அந்த வில்லைத் தன் கால் விரல்