பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135


“புருஷோத்தமனாகிய அந்த இராமனைக்‌ கண்டுகளிக்க ஆயிரம்‌ கண்கள்‌ வேண்டும்‌ சீதைக்கு” என்றனர்‌ சிலர்‌.

“சீதைதான்‌ என்ன ? அழகில்‌ குறைந்தவளா ? அவளைக்‌ கண்டுகளிக்க அவனுக்கும்‌ ஆயிரம்‌ கண்கள்‌ வேண்டும்‌” என்றனர்‌ மற்றும்‌ சிலர்‌.

“அஃதிருக்கட்டும்‌ அவன்‌ தம்பியைப்‌ பாருங்கள்‌. அவனும்‌ அழகில்‌ குறைந்தவனா ?” என்றனர்‌ வேறு சிலர்‌.

“இவர்களைப்‌ பெற்ற இந்த உலகம்‌ பெரிதும்‌ தவம்‌ செய்திருக்க வேண்டும்‌” என்றனர்‌ இன்னும்‌ சிலர்.

“இவர்களை இந்த நகருக்கு அழைந்து வந்த முனிவனை வணங்குங்கள்‌” என்றனர்‌ மற்றும்‌ சிலர்‌..

𝑥𝑥𝑥𝑥

நம்பியை – புகுஷோத்தமனான; இவனை காண—முழுவதும்‌ காண்பதற்கு ; தங்கைக்கு — நம்‌ சீதைக்கு; ஆயிரம்‌ நயனம்‌ வேண்டும்‌ — ஆயிரம்‌ கண்கள்‌ வேண்‌டும்‌ (என்பார்‌ சிலர்‌) கொம்பினை — பூங்கொடி போன்ற சீதையை ; காணும்‌ தோறும்‌ — பார்க்கும்‌ நேரம் ஒவ்வொன்றிலும்‌ ; குரிசிற்கும்‌ — அரசிளங்குமரனுக்கும்‌ அன்னதே—அவ்வாறே ; ஆயிரம்‌ கண்கள்‌ வேண்டும்‌ ; (இது கிடக்கட்டும்‌) தம்பியைக்‌ காண்மின்‌ — இராமனுடைய தம்பியைப்‌ பாருங்கள்‌ அவனும்‌ இவனில்‌ குறைந்தவன்‌ அல்லன்‌ என்பார்‌ ; உலகம்‌ தவம்‌ உடைத்து என்பார்‌ — இவர்களைப்‌ பெறுதற்கு இவ்வுலகம்‌ நல்ல தவம்‌ செய்துளது என்பார்‌, (இவ்வளவுக்கும்‌ மேலாக), இம்பர்‌ — இவ்வுலகத்திலே ; இந்நகரில்‌ – இந்த மிதிலை மாநகரிலே ; தந்த முனிவனை — இவர்களை அழைத்து வத்த விசுவாமித்திர முனிவனை; இறைஞ்சும்‌ என்பார்‌ — வணங்குங்கள்‌ என்பார்‌.

𝑥𝑥𝑥𝑥