பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வீழ்‌ கூந்தல்‌—அவிழ்ந்து வீழ்ந்த தங்கள்‌ கூந்தலை; பாரார்‌ பாராமலும்‌; மேகலை அற்ற நோக்கார்‌—மேகலா பரணம்‌ அறுந்து சிதறிப்‌ போவதைப்‌ பொருட்படுத்தாமலும்‌; சரிந்த—இடையினின்றும்‌ நழுவிய; பூந்துகில்கள்‌—பூம்‌ பட்டாடைகளை; தாங்கார்‌—தாங்கிப்‌ பிடித்துக்‌ கொள்ளாமலும்‌; இடை தடுமாற—மெல்லிய இடைவருந்தவும்‌; தாழார்‌—அதன்‌ பொருட்டு காலம்‌ தாழ்த்தாமலும்‌; நெருங்கினர்‌—மிகவும்‌ நெருங்கினவர்களாய்‌; நீங்குமின்‌ நீங்குமின்‌ என்று—விலகுங்கள்‌. விலகுங்கள்‌ என்று சொல்லிக்கொண்டு; நெருங்கிப்புக்கு— இராமன்‌ வரும்‌ தேரை அணுகி; தேன்‌ நுகர்‌ அளிமின்‌—தேன்‌ உண்பதற்கு கூடும்‌ வண்டுகளே போல்‌; மொய்த்தார்‌—மொய்த்துக்‌ கொண்டார்கள்‌.

𝑥𝑥𝑥𝑥


தோ கண்டார்‌ தோளே கண்டார்‌
       தொடு கழல்‌ கமலம்‌ அன்ன
தாள்‌ கண்டார்‌ தாளே கண்டார்‌
       தடக்கை கண்டாரும்‌ அஃதே
வாள்‌ கண்ட கண்ணார்‌ யாரே
       வடிவினை முடியக்‌ கண்டார்‌
ஊழ்‌ கண்ட சமயத்து அன்னான்‌
       உருவு கண்டாரை ஒத்தார்‌.

இராமனின்‌ தோள்‌ அழகு கண்டவர்கள்‌ அதிலேயே ஈடுபட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்‌. அவனது திருவடிகளைக்‌ கண்டவர்கள்‌ வைத்த கண்‌ வைத்தபடி அதையே பார்த்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. அவனது அழகிய நீண்ட கை கண்டார்‌ கையையே பார்த்து நின்றனர்‌. ஆக இராமனின்‌ திருவுரு முழுதுங்‌ கண்டவர்‌ எவருமிலர்‌. அது எப்படியிருந்தது? பரம்‌ பொருளை ஒவ்வொரு