பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141


ன்ன மெல்‌ நடையாரும்‌
        மழு விடை அனையாரும்‌
கன்னி நல்‌ நகர்‌ வாழை
        கமுகொடு நடுவாரும்‌
பன்னரு நிரை முத்தம்‌
        பரியன தெரிவாரும்‌
பொன்‌ அணி அணிவாரும்‌
        மணி அணி புனைவாரும்‌

அன்னம்‌ போன்ற நடை கொண்ட இளம்‌ பெண்களும்‌; காளை போன்ற இளம்‌ பிள்ளைகளும்‌, வாழைகமுகு இவற்றைக்‌ கொண்டு வந்து அவற்றிற்குரிய இடங்களில்‌ நட்டார்கள்‌; பருமனான முத்து ஆரங்களைத்‌ தெரிந்து எடுத்து அணிந்து கொண்டார்கள்‌; பொன்‌ ஆபரணங்களாலும்‌, இரத்தின ஆபரணங்களாலும்‌ தங்களை அலங்கரித்துக்‌ கொண்டார்கள்‌.

𝑥𝑥𝑥𝑥

கன்னி நல்‌ நகர்‌—இளமை நலம்‌ மிக்க அந்த நகரத்திலே; அன்னம்‌ மெல்‌ நடையாரும்‌—அன்னம்‌ போன்ற மெல்‌ நடையுடைய இளம்‌ பெண்களும்‌; மழவிடை அனை யாரும்‌—இளங்காளைகள்‌ போன்ற இளைஞர்களும்‌; வாழை—வாழை மரங்களை; கமுகொடு – பாக்கு மரங்களோடு—கொண்டு வந்து நடுபவராயிருத்தனர்‌; பன்ன அரு–விலை மதிக்க முடியாத; நிரை முத்தம்‌—வரிசையான முத்து வடங்சளிலே; பரியன தெரிவாரும்‌—பருமனானவற்றை (அணிந்து கொள்ளம்‌ பொருட்டு) தெரிந்து எடுப்பவராயிருந்தனர்‌; பொன்‌ ஆணி அணிவாரும்‌. பொன்னாலாகிய அணிகலன்களால்‌ தங்களை அலங்கரித்துக்‌ கொள்பவராயிருந்தனர்‌; மணி அணி புனைவாரும்‌–மற்றும்‌