பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

சிலர்‌ இரத்தின ஆபரணங்கள்‌ அணிந்து கொள்பவராய்‌ இருந்தனர்‌.

𝑥𝑥𝑥𝑥

ந்தனம்‌ அகில்‌ நாறும்‌
      சாந்தொடு தெரு எங்கும்‌
சிந்தினர்‌ திரிவாரும்‌
      செழுமலர்‌ சொரிவாரும்‌
இந்திர தனு நாணும்‌
      எரிமணி நிறைமாடத்து
அந்தமில்‌ விலையாரக்‌
      கோவைகள்‌ அணிவாரும்‌

வாசனை மிக்க சந்தனக்‌ குழம்பு அகில்‌ குழம்பு இவற்றையெல்லாம்‌ தெரு வெங்கும்‌ தெளித்துக்‌ கொண்டு திரிந்தார்கள்‌. மலர்களைக்‌ கொண்டு வந்து குவித்தார்கள்‌. வானவில்லைத்‌ தோற்கடிக்கும்‌ வகையில்‌ பல நிறங்‌ கொண்ட மணிகளால்‌ தங்கள்‌ மாளிகைகளின்‌ மேல்‌ மாடங்களை அணி செய்தார்கள்‌.

𝑥𝑥𝑥𝑥

நாறும்‌—நறுமணம்‌ வீசும்‌; சந்தனம்‌—சந்தனக்‌ குழம்பை; அகில்‌ சாந்தொடு—அகில்‌ கட்டை தேய்த்த குழம்போடு; தெரு எங்கும்‌—தெருக்களில்‌ எங்கும்‌, சிந்தினர்‌ திரிவாரும்‌—தெளித்துக்‌ கொண்டு செல்பவர்களும்‌; செழுமலர்‌—சிறந்த புதிய மலர்களை; சொரிவாரும்‌—கொண்டு வந்து அங்காங்கே குவிப்பாரும்‌; இந்திர தனி—வானவில்‌; நாணும்‌—வெட்கங்‌கொள்ளத்தக்க; எரிமணி—ஒளிவீசும்‌ பல நிற மணிகள்‌ பதித்த; திறை மாடத்து—வரிசையான மேல்‌ மாடங்களிலே; அந்தம்‌