பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தீபம்‌–பரந்த ஒளிதரும்‌ விளக்குகளையும்‌ இளம்‌ குளிர்‌ முளைஆர்‌–இளமை மிக்க குளுமையான மூளை பொருந்திய; நல்‌ பாலிகை இனம்‌—நல்ல பாலிகை வகைகளையும்‌; பத்தியின்‌ வைப்பாரும்‌ –வரிசையாக வைத்தார்கள்‌.

𝑥𝑥𝑥𝑥

ண்டியில்‌ நிறை வாசப்‌
        பனி மலர்‌ கொணர்‌ வாரும்‌
தண்டலை இலையோடும்‌
        கனி பல தருவாரும்‌
குண்டலம்‌ ஒளி வீசக்‌
        குரவைகள்‌ புரிவாரும்‌
உண்டை கொள்‌ மத வேழத்து
        ஓடைகள்‌ அணி வாரும்‌.

குளிர்ந்த நறுமணம்‌ வீசும்‌ மலர்களை வண்டிகளிலே கொண்டு வந்தார்கள்‌. தோட்டங்களிலிருந்து வாழை இலை, மா இலை, வெற்றிலை முதலிய இலைகளைக்‌ கொண்டு வந்தார்கள்‌; பழங்கள்‌ கொண்டு வந்தார்கள்‌.

தாங்கள்‌ அணிந்துள்ள குண்டலங்கள்‌ ஒளி வீசச்‌ குரவைக்‌ கூத்து ஆடினர்‌ சிலர்‌, யானைகளுக்கு நெற்றிப்‌ பட்டம்‌ சூட்டினர்‌ மற்றும்‌ சிலர்‌.

𝑥𝑥𝑥𝑥

பண்டியில்‌ – வண்டிகளில்‌; நிறை – நிறைந்த; வாசம்‌ — வாசனை வீசுகின்ற; பனி மலர்‌ — குளிர்ந்த மலர்களை; கொணர்வாரும்‌—கொண்டு வருபவர்களும்‌; தண்டலை – தோட்டங்களிலிருந்து இலையோடும்‌—வாழை இலை, மாஇலை,