பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

மலைவாரும்‌—கூந்தலிலே மலர்‌ சூடுவாரும்‌; அணி ஆடி முன்‌ அழகிய கண்ணாடியின்‌ முன்னே நின்று; மதிமுகம்‌—முழு மதி போன்ற தங்கள்‌ முகத்தில்‌; தில தம்‌ இடுவாரும்‌—பொட்டு இட்டுக்‌ கொள்பவரும்‌; சிகழிகை அணி வாரும்‌ — தலை முடியைப்‌ பலவாறு முடிந்து அழகு செய்து கொள்பவரும்‌; இலவு இதழ்‌ – இலவம்‌ பூ போன்ற உதடுகளிலே; பொலி கோலம்‌ இடுவாரும்‌—அழகிய செந்நிறம்‌ பூசுவோரும்‌.

𝑥𝑥𝑥𝑥

ன்னவர்‌ வருவாரும்‌
        மறையவர்‌ நிறைவாரும்‌
இன்னிசை மணி யாழின்‌
        இசை மது நுகர்வாரும்‌
சென்னியர்‌ திரிவாரும்‌
        விறலியர்‌ செறிவாரும்‌
கன்னலின்‌ மணவேலைக்‌
        கடிகைகள்‌ தெரிவாரும்‌.

திருமணத்தைச்‌ சிறப்பிக்கும்‌ பொருட்டு மன்னர்‌ பலர்‌ வந்து குழுமினர்‌; மறை வல்லோர்‌ பலர்‌ வருவாராயினர்‌; இசை வல்லாரும்‌, யாழ்வல்லாரும்‌ இவர்‌ தம்‌ இசை மது பருகும்‌ ரசிகரும்‌ வந்து கூடுவோராயினர்‌. பாணர்‌ பலர்‌ வந்தனர்‌. விறலியர்‌ பலரும்‌ வந்து கூடினர்‌, நாழிகை வட்டத்தைப்‌ பார்த்துத்‌ திருமண நேரத்தை அறிவிப்போரும்‌ வந்து சோந்தனர்‌.

𝑥𝑥𝑥𝑥

மன்னவர்‌ வருவாரும்‌ – திருமண விழாவினைச்‌ சிறப்பிக்கும்‌. பொருட்டு அரசர்‌ பலரும்‌ வருவாராயினர்‌; மறையவர்‌ நிறைவாரும்‌ – மறை வல்லோர்‌ பலர்‌ வந்து நிறை