பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

வாராயினர்‌. இன்‌ இசை—இனிய இசையோடு கூடிய; மணி யாழின்‌—அழகிய வீணையின்‌; இசை மது—இசைத்‌ தேனை; நுகர்வாரும்‌—ரசிப்பவர்களும்‌; சென்னியர்‌ திரிவாரும்‌—திரியும்‌ பாணர்களும்‌; விறலியர்‌ செறிவாரும்‌—பாண்மகளிர்‌ பலரும்‌ வந்து கூடலாயினர்‌; கன்னலின்‌—நாழிகை வட்டிலைப்‌ பார்த்து; (கடிகாரம்‌) மண வேலைக்‌ கடிகைகள்‌ முகூர்த்த தேரத்தினை; தெரிவாரும்‌ – ஆராய்ந்து கூறுவோரும்‌ (வந்தனர்‌)

𝑥𝑥𝑥𝑥

தேர்‌ மிசை வருவாரும்‌
        சிவிகையில்‌ வருவாரும்‌
ஊர்தியில்‌ வருவாரும்‌
        ஒளிர்‌ மணி நிறை ஓடைக்‌
கார்‌ மிசை வருவாரும்‌
        கரிணியில்‌ வருவாரும்‌
பார்‌ மிசை வருவாரும்‌
        பண்டியில்‌ வருவாரும்‌.

தேர்‌ மீது வந்தனர்‌ சிலர்‌; பல்லக்கில்‌ வந்தனர்‌ பலர்‌; வாகனங்களில்‌ வந்தவர்‌ வேறு சிலர்‌; ஆண்‌ யானை மீது ஏறி வந்தனர்‌; பெண்‌ யானை மீது ஏறி வந்தனர்‌; நடந்து வந்தோர்‌ பலர்‌; வண்டிகளில்‌ வந்தோர்‌ மற்றும்‌ பலர்‌.

𝑥𝑥𝑥𝑥

தேர்‌ மிசை வருவாரும்‌ தேரில்‌ ஏறி வருபவர்களும்‌; சிவிகையில்‌ வருவாரும்‌— பல்லக்கில்‌ வருபவர்களும்‌; ஊர்தியில்‌ வருவாரும்‌—வாகனங்கள்‌ மீது ஏறி வருவோரும்; ஒளி மணி – ஒளி வீசும்‌ மணிகள்‌; நிறை—நிறைந்த;