பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

வீற்றிருந்தார்கள். ஒன்றிய – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய; யோகமும் போகமும் ஒத்தார்—யோகமும் போகமும் ஒத்து இருந்தனர்.

𝑥𝑥𝑥𝑥


கோ மகன் முன் சனகன்
        குளிர் நன்னீர்ப்
பூ மகளும் பொருளும்
        என நீ என்
மாமகள் தன்னொடு
        மன்னுதி என்னாத்
தாமரை அன்ன
        தடக்கையின் ஈந்தான்.

நீயும் எனது மகளாகிய சீதையும், திருமாலும் திருமகளும் போல இனிது வாழ்வீராக என்று கூறி குளிர்ந்த நல்ல நீரினாலே தாரை வார்த்து இராமனின் பெரிய வலது கையிலே கொடுத்தான் சனகன்.

கோமகன் முன்—அரச குமாரனாகிய இராமன் முன் நின்று; சனகன்—சனக மன்னன்; நீ என் மாமகள் தன்னொடுநீ எனது அழகிய பெண்னாகிய சீதையுடன்; பூ மகளும் பொருளும் என—மலர் மகளாகிய லட்சுமியும் பரம்பொருள்