பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

வணங்கிப் புறப்பட்டனர். மற்றைய அரச குமாரர்களும், பிற மக்களும் சூழ்ந்து சென்றனர். மிதிலை வாழ் மக்கள் வழியனுப்பி வைத்துப் பிரியா விடை நல்கி உயிர் பிரிவதே போன்ற துயரக் கடலில் மூழ்கினார்கள்.

𝑥𝑥𝑥𝑥

உரவோன்—அறிவாற்றல் மிக்க தசரத மன்னன்; தன் மக்களும்—தன் புதல்வர்களும்; மருமக்களும்— தன் மக்களின் மனைவியராகிய மருமக்களும்; நனிதன் கழல் தழுவ—தன் திருவடிகளை நன்கு வணங்கித் தொடர்ந்து வரவும்; மன் மக்களும்—அரச குமாரர்களும்; அயல் மக்களும்— அவர்கள் அல்லாத பிற மக்களும்; வயின் மொய்த்திட— பக்கங்களிலே வந்து நெருங்கவும், மிதிலை தொல் மக்கள்— மிதிலை நகரிலே வாழும் பழைமையான குடிமக்கள்; தம் மனம் உக்கு—தங்கள் மனம் உடைந்து; உயிர் பிரிவு என்பது ஓர்— (தம் தம் உயிர் பிரிவதே போலும்) துயரின் வன்மம் கடல் புக — வருத்தமாகிய கொடிய கடலிலே மூழ்கவும்; உய்ப்பது ஓர் வழி—தனது நகருக்குச் செல்லும் வழியிலே; புக்கனன்—செல்வான் ஆயினன்.

𝑥𝑥𝑥𝑥


முன்னே நெடுமுடி மன்னவன்
        முறையில் செல மிதிலே
நன் மாநகர் உறைவார் மன
        நனி பின் செல நடுவே
தன் நேர் புரை தரு தம்பியர்
        தழுவிச் செல மழைவாய்
மின்னே எனும் இடையாளொடு
        இனிதேகினன் வீரன்