பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

வில்லை, நாணேற்றித் தெரித்து; அயில்முகம் - கூரிய வாயினை உடைய; வாளிகள் தெரிவான்-அம்புகளை (எய்தற் பொருட்டு) தெரிந்தெடுப்பவனும்.

xxxx


போரின் மிகை எழுகின்ற தோர்
        மழுவின் சிகை புகையத்
தேரின் மிசை மலை சூழ்
        வருகதிரும் திசை திரிய
நீரின் மிசை வடவைக் கனல்
        நெரு வானுற முடுகிப்
பாரின் மிசை வருகின்ற தோர்
        படி வெம் சுடர் படர

அந்தப் பரசுராமனின் ஆயுதமாகிய கோடாலியின் உச்சியிலிருந்து புகை கிளம்பவும், அவனது வருகை கண்டு அஞ்சி கதிரவன் தனது நிலை தடுமாறவும், கடலிலே உள்ள வடவாமுக அக்கினியானது தனது இடம் விட்டு வான் அடைய எண்ணி விரைந்து வருவது போலத் தனது மேனியினின்றும் வெம்மை ஒளி வீச வந்தான்.

xxxx

போரின் மிசை–போரிலே; எழுகின்றது-—தலை நிமிர்ந்து எழும்; ஒர் மழுவின்—ஒப்பற்ற மழுப்படையின்; சிகை புடைய – தலை புகையவும்; தேரின்மிசை—ஒற்றையாழித் தேரிலே; மலை சூழ்வருகதிரும்—மேருமலையைச் சுற்றி வருகிற கதிரவனும்; திசைதிரிய—அச்சத்தினாலே தனது கதி தடுமாறிச் செல்லவும்; நீரின் மிசை–கடல் நீரிலே உள்ள; வடவைக் கனல்—வடவாமுக அக்கினியானது; நெடுவான்உற—தன்