பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

இடம் விட்டு நீண்டவானை அடையுமாறு; முடுகி—விரைந்து; பாரின் மிசை—பூமியின் மேலே; வருகின்றது ஓர் படி—நடந்து வரும் தன்மை போல; வெம் சுடர் படர—தனது உடலின் வெப்ப ஒளி படரவும்.

𝑥𝑥𝑥𝑥


விண் கீழுற என்றோ
        படி மேல் பால் உற என்றோ
எண் கீறிய உயிர் யாவையும்
        எமன் வாயிட என்றோ
புண் கீறிய குருதிப் புனல்
        பொழிகின்றது புரைய
கண் கீறிய கனலான் முனிவு
       யாதென்று அயல் கருத

பரசுராமனுடைய கோபத்துக்குக் காரணம் யாதோ ? வான் உலகினை மண் உலகிற்குக் கொண்டு வருதற்கோ ? அன்றி மண் உலகை வானிலே கொண்டு சேர்க்கவோ ? எண்ணற்ற உயிர் இனங்களை எமனுலகுக்கு அனுப்பவோ ? என்னவோ தெரியவில்லையே என்று அயல் நின்றார் நினைக்க.

𝑥𝑥𝑥𝑥

புண் கீறிய—புண்ணைக் கீறிய உடனே; குருதிப்புனல் பொழிகின்றது புரைய – இரத்தமானது சொரிவது ஒப்ப; கண் கீறிய கனலான் – கண்களினின்றும் வெளிப்படுகின்ற தீயுடைய பரசுராமனின்; முனிவு—கோபம்; விண் கீழுற என்றோ—மேலேயுள்ள விண்ணுலகைக் கீழே கொண்டு வருவதற்கோ (அல்லது) படிமேல் பால் உற என்றோ—பூமியானது மேலே (விண்ணை) அடைய வேண்டும் என்றோ; எண் கீறிய உயிர்