பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

யாவையும்–எல்லா உலகங்களிலும் உள்ள கணக்கற்ற உயிர்களை எல்லாம்; எமன்வாய் இட என்றோ—எமன் உலகு சேர்க்கவோ; யாது—இஃது என்னவோ (இவர் தம் கோபத்துக்குக் காரணம் யாதோ) என்று; அயல் கருத—என்று அருகில் உள்ளோர் நினைக்கவும்.

xxxx


பாழிப் புயம் உயர் திக்கிடை
        அடையப் புடை படரச்
சூழிச் சடைமுடி விண் தொட
        அயல் வெண்மதி தொத்த
ஆழிப் புனல் எரி கானிலம்
        ஆகாயமும் அழியும்
ஊழிக் கடை முடிவில் திரி
        உமை கேள்வனை ஒப்ப

கைகளை வீசி ஆரவாரம் செய்துகொண்டு வருகிறான் பரசுராமன். அவனது சடாமுடி வானளாவியது. அதிலே சந்திரன் தொத்திக் கொண்டான். ஊழிக் கால இறுதியிலே தோன்றும் உருத்திர மூர்த்தி போல விளங்கினான் அவன்.

xxxx

பாழி புயம்—வலிய தோள்கள்; உயர்திக்கு இடை அடைய—உயர்ந்த திக்குகளை எட்டும்படி; புடை படர–பக்கங்களிலே வீசவும்; சடை முடி சூழி -சடா மகுட உச்சியில் உள்ள கொண்டை மயிர் முடி; விண் தொட– வானை அளாவவும்; அயல்-அதன் ஒரு புறத்தே; வெண்மதி தொத்த-வெள்ளிய சந்திரன் தொத்திக் கொள்ளவும்; ஆழி புனல்-கடல் நீரும்; எரி – தீயும்; கால் – காற்றும்; நிலம்—மண்ணும்; ஆகாயமும்- வானும்; (ஆகிய ஐம்பெரும்

21