பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

மேகங்கள் உலவுதற்கு இடமாக வடக்கேயுள்ள மேருமலை போல; உலையா வலி சால்வன—குன்றாத வலி மிக்கனவும்: யாவையும் ஏலாதன—வேறு வில் எதையும்; தனக்கு ஒப்பாக ஏற்றுக்கொள்ள இயலாதனவும்; மனனால் — மனத்தாலே; அருகா வினை புரிவான் – குறை சிறிதும் இன்றி நிர்மாணம் செய்கிற; அவனால்—அந்த விசுவகர்மாவினால்; அமைவன ஆம்—சிருஷ்டிக்கப்பட்டனவாய் ; இரு கார்முகம்—இரண்டு விற்கள்; மேல்நாள் உள– முன்னாளில் இருந்தன.

𝑥𝑥𝑥𝑥


ன்றினை உமையாள் கேள்வன்
        உகந்தனன் மற்றை ஒன்றை
நின்றுல களங்த நேமி
        நெடியவன் நெறியிற் கொண்டான்
என்றிது உணர்ந்த விண்ணோர்
        இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது என்று
        விரிஞ்சனை வினவ அந்நாள்

அந்த விற்களில் ஒன்றைச் சிவபெருமான் எடுத்துக் கொண்டான் ; மற்றொன்றைத் திருமால் எடுத்துக் கொண்டான். இந்த இரண்டில் வலிமை மிக்கது எது என்று தேவர்கள் பிரம்மனைக் கேட்டார்கள்.

𝑥𝑥𝑥𝑥

ஒன்றினை—அந்த இரண்டு விற்களில் ஒன்றை உமையாள் கேள்வன—உமையவள் பாகத்தனாகிய சிவன் உகந்தனன்—விரும்பி எடுத்துக் கொண்டான்; மற்றை ஒன்றை—மற்றொரு வில்லை; நின்று உலகு அளந்த—ஓங்கி நின்று உலகெலாம் தன் ஈரடியால் அளந்த, நேமி நெடியவன்