பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170


பூதலத்து அரசை எல்லாம் – பூமியில் உள்ள அரசர் எல்லாரையும்; பொன்றுவித்தனை—நீ அழித்தாய்; என்றாலும் — க்ஷத்திரியனாகிய நான் உன்னைக் கொல்வது தகும் என்றாலும்; வேதவித்து ஆகிய மேலோன் மைந்தன் நீ— வேதங்களை எல்லாம் ஓதி உணர்ந்த மேலோனாகிய ஜமதக்னி முனிவரின் மைந்தன் நீ; விரதம் பூண்டாய்; தவ வேடம் தலைக்கொண்டுள்ளாய்: ஆதலின் கொல்லல் ஆகாது–ஆதலால் உன்னைக் கொல்வது தகாது; அம்பு இது—நான் தொடுத்துள்ள இந்த அம்பு; பிழைப்பது அன்று—தவறுவது ஆகாது. (ஆதலின்) இதற்கு இலக்கமாவது யாது – இந்த அம்புக்கு இலக்காவது எது? இயம்புதி — சொல்வாய்; விரைவில்—சீக்கிரம் என்றான்)

𝑥𝑥𝑥𝑥


நீதியாய் முனிந்திடேல்
        நீ இங்கு யாவர்க்கும்
ஆதியாய் அறிந்தனென்
        அலங்கல் நேமியாய்
வேதியா இறுவதே
        அன்றி வெண்மதில்
பாதியான் பிடித்த வில்
        பற்றப் போதுமோ!

தர்மத்தின் வடிவே ! எல்லாவற்றிற்கும் ஆதியே ! வேதங்களின் முதல்வ! நீ யார் என்பது அறிந்தேன். என் மீது கோபம் கொள்ளாதே. அந்தச் சிவதனுசு உன் வலிமைக்கு எம்மாத்திரம் ? அது முறிந்து போகாமல் எப்படியிருக்கும் ?

𝑥𝑥𝑥𝑥