பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171


நீதியாய்—தர்மத்தின் வடிவே; இங்கு யாவர்க்கும் ஆதியாய்—எல்லாவற்றிற்கும் ஆதியான ஜோதியே; அலங்கல் நேமியாய்–ஒளி வீசும் சக்கரதாரியே ! வேதியா – வேதங்களின் முதல்வ; அறிந்தனன்—நீ யார் என்று நான் அறிந்து கொண்டேன். முனிந்திடேல்–என்மீது கோபம் கொள்ளாதே; வெண்மதி பாதியான் – வெள்ளிய பிறைச் சந்திரனை அணிந்தவனும்; பாதி உடலைப் பார்வதிக்கு அளித்தவனும் ஆகிய சிவன்; பிடித்த வில் – கைக்கொண்ட வில்; பற்றப் போதுமோ. நீ பிடித்து நாணேற்றப் போதிய வலிமை உடையதோ (இல்லை, முறிந்துதான் போகும்)

𝑥𝑥𝑥𝑥


பொன்னுடை வனை கழல்
        பொலங் கொள் தாளினாய்
மின்னுடை நேமியான் ஆதல்
        மெய்ம்மையால்
என்னுடைத்து உலகு இனி
        இடுக்கண்! யான் தந்த
உன்னுடைய வில்லும் உன்
        உரத்துக்கு ஈடு அன்றால்

“காத்தல் தொழிலை உடைய திருமாலாகிய நீ நல்லாரைக் காத்து, அல்லாரை அழிக்கவே அவதரித்து உள்ளாய்; இனி இந்த உலகுக்குத் துன்பம் ஏது? யான் கொடுத்தேனே ! இந்த உனது வில்! இதுவே உன் வலிமைக்கு ஈடு கொடாது. அங்ஙனமிருக்க அந்தச் சிவன் வில் முறிந்ததில் வியப்பு ஏது?”

𝑥𝑥𝑥𝑥

பொன் உடை—பீதாம்பரமும்; வனைகழல் — சித்திர வேலைப்பாடு அமைந்த வீரக் கழலையும் அணிந்த, பொலம்