பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

கொள்—அழகிய; தாளினாய்—திருவடிகளை உடையாய்; மின் உடை—ஒளி வீசும்; நேமியான் ஆதல் – சக்கராயுதம் தரித்த திருமால் என்பது; மெய்ம்மையே — உண்மையே. உலகு இனி என் இடுக்கண் உடைத்து– உலகம் இனித் துன்பம் உடையதாவது எங்ஙனம்? யான் தந்த – நான் இப்போது கொடுத்த; உன்னுடைய வில்லும்—நாராயணனாகிய உனது வில்லும்; உன் உரத்துக்கு ஈடு அன்று—உன் வலிமைக்கு ஈடு கொடாது;

𝑥𝑥𝑥𝑥


ய்த அம்பு இடை பழுது
        எய்திடாமல் என்
செய்தவம் யகவையும்
        சிதைக்கவே எனக்
கையவன் நெகிழ்த்தலும்
        கணையும் சென்று அவன்
மையறு தவம் எலாம்
        வாரி மீண்டதே.

“நீ தொடுத்த அம்பு பழுது போக வேண்டாம். எனது தவப்பயன் முழுதும் சொள்க” என்றான் பரசுராமன். அவ்வளவில் இராமன் தனது பிடியைத் தளர்த்தினான். அந்தக் கனை பாய்ந்து பரசுராமனின் தவப்பயன் முற்றும் கொண்டு மீண்டது.

𝑥𝑥𝑥𝑥

எய்த அம்பு – நீ இப்போது தொடுக்கும் அம்பு; இடை பழுது எய்திடாமல்–இடையே குறை நேரா வண்ணம்; என் செய் தவம் யாவையும் – நான் செய்த தவத்தின் பயன் முழுவதையும்; சிதைக்க என—கொள்வதாக என்று சொல்ல;