பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

அவண் – அந்த இடத்திலே; கை நெகிழ்த்தலும் – அம்பு பற்றிய பிடியை நழுவவிடலும்; கணையும் சென்று—வில்லினின்று விடுபட்ட அந்த அம்பு போய்; அவன்—அப்பரசுராமனுடைய; மை அறுதவம் எல்லாம் – குற்றமற்ற தவப் பயனை எல்லாம்; வாரி–கவர்ந்து ; மீண்டது–திரும்பி வந்து இராமனுடைய அம்புப் புட்டியில் புகுந்தது.

𝑥𝑥𝑥𝑥


ண்ணிய பொருள் எலாம்
        இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற
        வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும்
        களைகண் ஆகிய
புண்ணிய விடை எனத்
        தொழுது போயினான்.

“நீலமணி வண்ணனே! யாவர்க்கும் பற்றுக் கோடாகிய புண்ணியனே ! வளமான திருத்துழாய் மாலை அணிந்த கண்ணியனே ! நீ எண்ணிய எண்ணியாங்கு எய்துக” என்று கூறி இராமனை வணங்கி, விடைபெற்றுப் போனான் பரசுராமன்.

𝑥𝑥𝑥𝑥

மண்ணிய மணிநிற வண்ண் – தூய்மை செய்யப்பட்ட நீலமணி போலும் திருமேனியனே ! வண் துழாய் கண்ணிய – வளம் பொருந்திய திருத்துழாய் மாலை அணிந்தவனே! யாவர்க்கும் களை கண் ஆகிய புண்ணியனே — எவ்வுலகத்தவர்க்கும் பற்றுக் கோடாகிய புண்ணியனே!