பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13



சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் முதல் இன்று வரை இந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர் என்றே அழைக்கப்படுகிறது.

இதை விடுத்து எங்கோ ஓர் ஊரைப் பிடித்துக்கொண்டு எந்த வித ஆதாரமும் இல்லாமல் இதுதான் திருவெண்ணெய் நல்லூர் என்று சொல்கிறார்களே இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முடியாது; முடியாது; முடியவே முடியாது.

சடையப்ப வள்ளல் வாழ்ந்த திருவெண்ணெய் நல்லூர். தென் ஆற்காடு ஜில்லாவில் உள்ளது; பெண்ணையாற்றின் கரையில் உள்ளது; சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல் பெற்றது, தஞ்சை ஜில்லாவில் உள்ள கதிராமங்கலம் அன்று; அன்று.

கம்பரது காலம்

ம்பர் காலம் எது? கம்பர் வாழ்ந்த காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் கருத்து. கம்பராமாயணத் தனிச்செய்யுள் ஒன்று இக்கருத்தை வலியுறுத்துகிறது. அஃதாவது வருமாறு:


ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறு ஒழித்துத்
தேவன் திருவழுந்துர் நன்னாட்டு மூவலூர்
சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
காரார் காகுத்தன் கதை

கம்பர் தமது காவியத்தைப் பாடி முடித்த காலம் சகாப்தம் 1100. அதாவது கி.பி. 1178