பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15




மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் - என்னை
விரைந்து ஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளஈத கொம்பு

—கம்பர்.

அங்ஙனம் சிலகாலம் இருந்தபின் மீண்டும் வந்து திருவெண்ணெய் நல்லூர் சடையப்பரின் ஆதரவு பெற்று இராமாயணத்தைப் பாடி முடிந்தார் என்பது செவி வழி வந்த கதை.

கம்பர் ராமாயணம் பாடியதேன்?

ம் நாட்டிலே எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அங்ஙனம் இருக்க அவற்றை யெல்லாம் விடுத்து இராம காதையைக் கம்பன் தெரிந்தெடுத்தது ஏன்? காவியமாகப் பாடியது ஏன்?

இதற்குப் பதில் கம்பரே சொல்கிறார்,

“ஆசை பற்றி அறையலுற்றேன் பற்று இக்காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ”

“ஆசை கொண்டதால் இந்த இராமன் கதையைச் சொல்ல முற்பட்டேன்” என்கிறார்.

என்ன ஆசை? சொல்லவேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை எதனால் எழுந்தது?