பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

வேண்டாமா? அன்பு அன்பு என்று சும்மா விட்டு விடலாமா? விடக்கூடாது. எனவே குற்றம் செய்வோரைத் தண்டித்து வந்தான். எது போல? நோய் போல.

நோய் எப்படி வருகிறது ? இயற்கை வகுத்த நியதிகளை மீறி நடக்கும் போது, இயற்கை நெறி மீறி நடப்பவனைத் தண்டிப்பதற்காக. இப்படி வரும் நோய் போல அரசன் வகுத்த ஒழுங்குமுறைகளை மிறி நடப்பவரைத் தண்டித்தான். யார்? மன்னன் தசரதன்.

அப்படி தண்டித்தாலும் அவர்கள் பால் கருணை காட்டாது இருப்பானா? இருக்க மாட்டான். கருணை காட்டுவான் எது போல? நோய் தீர்க்கும் மருந்து போல.

தாய் ஒக்கும் அன்பில்; தவம் ஒக்கும் நலம் பயப்பில்
..............................................................................
..............................................................................
நோய் ஒக்கும் எனில், மருந்து ஒக்கும்.....................

என்கிறான் கம்பன்.

வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு மகுடாபிஷேகம் செய்கிற சமயத்திலே அந்த சுக்ரீவனுக்குச் சில நல்லுரைகள் கூறுகிறான் இராமன். இராமன் கூறுவது போல நமக்குக் கூறுகிறார் கவி. நமக்கு மட்டும் அன்று; எல்லா அரசர்களுக்கும் கூறுகிறார், நாடாள முன் வருவோர் பலருக்கும் கூறுகிறார்.

இவன் நமது அரசன் அல்லன்; நம்மைப் பெற்று எடுத்து அன்பு பாராட்டி வளர்க்கும் தாய் என்று உனது குடிமக்கள் உன்னை ஆதரிக்க வேண்டும். அந்த வகையில் நீ அவர்களைப் பாதுகாப்பாய்.

4