பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38




முந்து முக்கனியின் நானா
       முதுரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர்க் கண்டம் கண்டம்
      இடையிடை செறிந்த சோற்றில்
தம் தம் இல்லிருந்து தாமும்
      விருந்தொடும் தமரினோடும்
அந்தணர் அமுதர் உண்டி
      அயில்வுறும் அமலைத்து எங்கும்.

 ‘அந்த நாட்டிலே பெண்கள் கல்விஅறிவு மிகுந்தவர்கள் ஆக இருந்தார்கள். பெண் கல்வி நிலவியது. அதுமட்டும் அன்று, பெண்களுக்கு சொத்து உரிமை இருந்தது. எல்லாம் நிறைந்து இருந்தன. ஆசைப்படுவதற்கு வேறு எதுவுமே இல்லை. ஒரே ஓர் ஆசைதான்.
 வெளி நாட்டிலிருந்து வறுமையுற்றோர் எவராவது வர மாட்டாரா? அவர் வறுமை போக்க நம்மால் இயன்றன எல்லாம் வழங்க மாட்டோமா? வெளி நாட்டிலிருந்து ‘பசி’ என்று எவராவது வர மாட்டார்களா? அவருக்கு விருந்தளிக்க மாட்டோமா என்னும் ஆசைதான். வேறு எவ்வித ஆசையும் இல்லை.


பெருந் தடங்கண் பிறை நுதலார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விழைவன யாவையே ?

  அந்த நாட்டிலே ஊட்டிடங்கள் நிறைய இருந்தன. அதாவது அன்ன சத்திரங்கள். வேற்று நாடுகளிலிருந்து வந்தவராயினும் சரி, உள் நாட்டிலே இருந்து இயலாமை