பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43



கம்பன் கவித்திரட்டு

முதல் காண்டம்

பாலகாண்டம்

லகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

எல்லாம் வல்ல இறைவனுக்கு வணக்கம் செலுத்துகிறார் கம்பர். இறைவன் இந்த உலகினைப் படைக்கிறான்; காக்கிறான்; அழிக்கிறான்.

படைத்தல், காத்தல் அழித்தல் ஆகிய இந்த மூன்று தொழில்களும் தொடர்ந்து நடக்கின்றன; நடந்து கொண்டே இருக்கின்றன. இடைவிடாது நடந்து கொண்டே இருக்கின்றன.

இது இறைவனின் திருவிளையாடல். இவ்விளையாடலுக்கு ஓர் எல்லை உண்டா? இல்லை, முடிவே இல்லை, இவ்விதம் விளையாடும் ஒருவனே நம் தலைவன், அவனே நம் இறைவன். அவனையே நாம் சரண் அடைவோம்.

உலகம் யாவையும் — உலகங்கள் எல்லாவற்றையும்: அவற்றில் உள்ள உயிர் இனங்கள் எல்லாவற்றையும்; தாம் உள ஆக்கலும் — தோன்றச் செய்தலும்; நிலை பெறுத்தலும் — நிலைத்திருக்கச் செய்தலும்; நீக்கலும் — அழிந்து போகக் செய்தலும் நீங்கலா— (ஆகிய) இடைவிடாத; அலகு இலா—