பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூன்முகம்

1974 ஆம் ஆண்டு! நினைத்தாலே இப்போதும் மனம் நடுங்குகிறது. ஏன்? எங்கள் வாழ்க்கையிலே சூறாவளி வீசிய காலம்! துன்பங்கள் ஒன்றல்ல, இரண்டு அல்ல; பல, பற்பல; அடுத்தடுத்து வந்து, சுக்கான் இல்லா கப்பலாக எங்களை ஆட்டிவைத்த காலம். எழுத்தாளனுக்கு தொல்லைகளிலே தான் வளர்ச்சி என்பார்களல்லவா? அப்படியே அத்தொல்லைகள் எங்களை கம்ப இராமாயண ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது.

அதன் விளைவாக ஓரளவு தமிழ் படித்தவர்களும் கூட, கம்பனை அறிய வேண்டும்; ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. இந்த நினைவே, ‘கம்பன் கவித்திரட்டு’ என்ற தொகுப்புக்கு வித்திட்டது. காண்டங்கள் அனைத்தும் விரைவிலே தொகுக்கப்பட்டன. அதே சமயம் சிக்கல்கள் தாமே தீர்ந்தன. மனத்திலே தைரியம் ஏற்பட்டது. வீறுகொண்டெழுந்தது.

வாழ்க தமிழ் !

வாழ்க கவிச்சக்கரவர்த்தி கம்பன் !!

தொகுப்பாசிரியர்கள்

(அமரர்) சக்திதாசன் சுப்பிரமணியன்

ஜலஜா சக்திதாசன்