பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


எப்படித் தாவினான்? அஞ்சிலே ஒன்று வழியாகத் தாவினான். அதாவது வான வீதி வழியே தாவினான். தாவி அயலார் ஊர் சென்றான்

அயலார் ஊர் எது? இலங்கை. எதற்காக சென்றான்? ஆருயிர் காக்க. யாருடைய ஆர் உயிர்? சீதையின் ஆருயிர்

சென்று என்ன செய்தான்? அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டான். ஐம்பெரும் பூதங்களிலே ஒன்று நிலம்; பூமி. பூமி தேவியின் மகளாகிய சீதையைக் கண்டான்.

அயலார் ஊராகிய இலங்கைக்குத் தீ வைத்தான். அத்தகைய அநுமன் நம் எல்லாரையும் காப்பானாக.

அஞ்சிலே ஒன்று—ஐம் பெரும் பூதங்களிலே ஒன்றாகிய காற்று; பெற்றான்—பெற்றவனாகிய அநுமன்; அஞ்சிலே ஒன்றைத் தாவி; பஞ்ச பூதங்களிலே ஒன்றாகிய நீரை (அதாவது கடலை) தாவி– அஞ்சிலே ஒன்று ஆறு ஆக—ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய வான் வழியாக; ஆருயிர் காக்க—சீதையின் அரிய உயிர் காத்தல் பொருட்டு; ஏகி—சென்று. அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய பூமி தந்த செல்வியைக் கண்டு. அயலார் ஊரில்–மாற்றார் ஊராகிய இலங்கையில். அஞ்சிலே ஒன்று வைத்தான் — ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய தீயை வைத்தவனாகிய அவன் — அந்த அநுமன் நம்மை அளித்துக் காப்பான்—நாம் வேண்டுவனவற்றை அளித்து நம்மைக் காப்பானாக.

அசோக வனத்திலே சிறை இருந்த செல்வியைக் கண்டான் அநுமன். எந்நிலையில் கண்டான்? உயிர் விடும்