பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

நிலையில் கண்டான். ராம நாமத்தைக் கூறினான். கேட்டாள் சீதை, உயிர் விடும் முயற்சியைக் கைவிட்டாள். இவ்வாறு சீதா தேவி உயிர் காத்தான் அநுமன்.

சை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவு நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ.

கதை சொல்வது என்ற முடிவுக்கு வந்தார் கம்பர். கதையும் சொல்லத் தொடங்கிவிட்டார். திடீரென்று கேள்வி ஒன்று எழுந்தது.

“உலகத்திலே எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது இந்த இராமன் கதையை நீ ஏன் சொல்கிறாய் ?”

இதுதான் கேள்வி. உடனே பதில் சொல்கிறார் கம்பர்.

“சக்கரவர்த்தி திருமகனாகிய இராமபிரானின் கதை மிகச் சிறந்த ஒன்று. எனவே இதை எல்லோருக்கும் எடுத்துக்கூறல் வேண்டும் என்ற ஆசை கொண்டேன். அந்த ஆசையினாலே இதைச் சொல்லத் தொடங்கினேன்” என்றார்.

‘இடி இடி’ என்று எவரோ சிரிப்பது போல் தோன்றியது. “இராமகாதை பெரியதொரு காவியம், அதைப் பாட முன்வந்திருக்கிறாய். ஆசை என்கிறாய், ஆசை என்பதன் பொருட்டு எதை வேண்டுமானலும் செய்யலாமா ?”