பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49



வையம் என்னை இகழவும் – உலகினர் என்னை இகழ்ந்து கூறவும்; மாசு எனக்கு எய்தவும் – களங்கம் வந்து என்னை அடையவும்; இது – இந்த இராம காதையை; இயம்புவது யாது எனில் – சொல்வது எக்காரணம் பற்றி என்று கேட்டால்; பொய்யில் கேள்விப் புலமையினோர்—மெய்ஞானியராகிய வால்மீகி முனிவரும் காளிதாசரும்; புகல் சொல்லிய தெய்வமாக் – கதை தெய்வீகப் பெருங்கதையின் ; மாட்சி — பெருமையை ; தெரிவிக்கவே – தெரிவிப்பதன் பொருட்டே ஆகும்.

ரவி தன் குலத்து எண்ணில் பார் வேந்தர்தம்
     பரவும் கல் ஒழுக்கின்படி பூண்டது
சரயு என்பது; தாய்முலை அன்னது; இவ்
      உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்

ஒரு நாடு வளம் பெறக் காரணமாயிருப்பது ஆறு. ஆறு இன்றேல் உயிர்கள் வாழ்தல் எங்ஙனம்? நிலம் விளைவது எப்படி? மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு பெறுவது எப்படி?

கோசல நாட்டுக் குரிசிலாகிய இராமனைப் பாடப் புகுந்த கம்பர் அந்தக் கோசல நாட்டின் வளத்துக்குக் காரணமாக இருந்த சரயு நதியைப் பாடுகிறார்.

கதாநாயகனாகிய இராமன் தோன்றிய குலம் சூரிய குலம். அக்குலம் மிக்க பெருமை கொண்டது.

அக்குலத்தில் தோன்றிய மன்னர் பலரும் நல் ஒழுக்கம் பூண்டு விளங்கினர். அவ்வாறே நல்லொழுக்கம் பூண்டு விளங்கியது சரயுநதி. நல் ஒழுக்கம் உடையது என்றால் எப்படி?

7