பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பூசிக்கொண்ட எருமைகள் கன்றுகளை எண்ணிக் கனைக்கின்றன; அப்படிக் கனைத்த உடனே பால் சொரிகின்றன தாமரை மலரிலே படுத்திருக்கின்ற அன்னக் குஞ்சுகள் தூங்கியவாறே அந்தப் பாலைக் குடிக்கின்றன. அவ்வாறு பால் குடித்துத் தூங்கும் குஞ்சுகளுக்குத் தாலாட்டுப் பாட வேண்டாமா?

வயல்களிலே உள்ள பர்சைத் தேரைகள் எழுப்பும் ஒலி, அந்த அன்னக் குஞ்சுகளுக்குத் தாலாட்டுப் பாடுவது போல் இருக்கிறதால்.

பண்ணை—வயல்களில்; சேல் உண்ட ஒண் கணாரில்—சேல் மீன் போன்ற அழகிய கண்களை உடைய பெண்கள் போல்; திரிகின்ற—நடந்து திரிகின்ற; செங்கால் அன்னம்—சிவந்த கால்களை உடைய அன்னப் பறவைகள்; மால் உண்ட—மயங்குதல் உற்ற; நளினப் பள்ளி—தாமரை மலராகிய படுக்கையிலே; வளர்த்திய கண்—வளரச் செய்த; மழலைப் பிள்ளை—இளம் குஞ்ஈகள்; கால் உண்ட சேறு—முழங்கால் வரை சேறு பூசிய; மேதி—எருமை. கன்று உள்ளி— தன் கன்றை நினைத்து; கனைப்ப—கனைக்க; சோர்ந்த—சொரிந்த; பால் உண்டு—பாலை உண்டு; துயில—தூங்க; பச்சைந் தேரை—பச்சை நிறங் கொண்ட தவளைகள்; தாலாட்டுப்—தாலாட்டும் பாடும்.

குயிலினம் வதுவை செய்யக்
      கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும்
      அரங்கினுக்கு அழகு செய்ய