பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57



பயில் சிறை அரச அன்னம்
     பன்மலர் பள்ளி நின்றும்
துயில் எழத் தும்பி காலைச்
     செவ்வழி முரல்வ சோலை

சோலைகள் நிறைந்த அந்தக் கோசல நாட்டிலே ஆணும் பெண்ணுமாகக் குயில்கள் இன்புற்று இருக்கின்றன. மகளிர் நடனம் ஆடுகின்றார்கள். அவர்களுக்கு அழகு தரும் விதத்திலே மரங்களிலே மயில்கள் தங்கள் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுகின்றன. தும்பிகள் ரீங்காரம் செய்கின்றன; ரீங்காரம் எப்படி இருக்கிறது ? விடியற் காலையிலே பள்ளி எழுச்சி பாடுவது போல் இருக்கிறது. அது வரை தாமரை மலரிலே தூங்கிக் கொண்டிருந்த அரச அன்னங்கள் அந்தப் பள்ளி எழுச்சி இசை கேட்டுக் கண் விழித்து எழுகின்றன.

சோலை—சோலைகளில்; குயில் இனம். குயில் இனங்கள்; வதுவை செய்ய—ஆண் குயில்களுடன் கூடி இன்புற்று இருக்க; கொம்பு இடை—மரக்கிளைகளில்; மஞ்ஞை—மயில்கள்; குனிக்கும்—ஆடும். (அது எப்படியிருக்கிறது என்றால்) அயில் விழி மகளிர்—வேல் போலும் விழி படைத்த பெண்கள்; ஆடும் அரங்கினுக்கு—நடனம் செய்கிற அரங்கினுக்கு அழகு செய்ய—மேலும் அழகு செய்வது போலுளது. பயில் சிறை—நெருங்கிய சிறகுகள் கொண்ட; அரச அன்னம்—ராஜ ஹம்ஸங்கள்; பன் மலர்ப் பள்ளி நின்றும்—பல்வேறு தாமரை மலர்ப் படுக்கைளிலிருத்தும்; துயில் எழ—விழித்து எழ; தும்பி—வண்டுகள்: செவ்வழி—செவ்வழி எனும் ராகத்தைப்; முரல்வ—பாடுகின்றன.