பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58




நில மகள் முகமோ ! திலகமோ !
        கண்ணோ ! நிறை நெடு மங்கல நாணோ !
இலகு பூண் முலைமேல் ஆரமோ !
        உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய
மலர் கொலோ மாயோன் மார்பின்
        நல்மணிகள் வைத்த பொற்
                பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ ஊழியின்
       இறுதி உறையுளோ யாது உரைப்பாம் !

இதுவரை கோசல நாடு பற்றிக் கூறினார் கம்பர். இப்போது அந்த நாட்டின் தலைநகராகிய அயோத்தி பற்றிக் கூறுகிறார்.

இந்த நகரம் என்ன பூமி தேவியின் திருமுகமோ ! அம்முகத்தில் விளங்கும் திலகமோ ! நில மடந்தையின் கண்ணோ திருமங்கலச் சரடோ மார்பிலே விளங்கும் ரத்தின மாலையோ! திருமகள் இனிது வீற்றிருக்கும் தாமரை மலரோ! திருமால் மார்பிலே உள்ள நல் மணிகள் வைத்த தங்கப் பெட்டியோ ! வைகுண்டமோ ! ஊழிக்காலத்திலே எல்லாப் பொருளும் தங்கும் இடமாகிய திருமாலின் வயிறோ !


இவற்றுள் எது என்று சொல்வது !

இவ்வாறு வியந்து கூறுகிறார் கம்பர்.

நிலமகள் முகமோ—பூமி தேவியின் திருமுகமோ; திலகமோ—அம்முகத்தில் விளங்கும் திலகமோ; கண்ணோ—அவளது கண்ணோ; நிறை நெடுமங்கல நாணோ—நிறைந்த