பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

நீண்ட மங்கலச் சரடோ; இலகுபூண் முலைமேல் ஆரமோ—மார்பிலே விளங்கும் ரத்ன மாலையோ; உயிரின் இருக்கையோ—உயிர் இருக்கும் இடமோ; திருமகட்கு இனிய மலர் கொலோ—திருமகள் இனிது வீற்றிருக்கும் தாமரை மலர் தானோ; மாயோன்—திருமாலின் மார்பில்—மார்பிலே விளங்கும் ; நல்மணிகள் வைத்த—உயரிய மணிகள் வைக்கப்பெற்ற; பொன் பெட்டியோ—தங்கப் பெட்டியோ; வானோர் உலகின்மேல்—தேவர் உலகுக்கும் மேலான; ஓர்—ஓப்பற்ற; உலகோ—வைகுண்டமோ, ஊழியின் இறுதி உறையுளோ—ஊழிக்காலத்தின் முடிவிலே எல்லாப் பொருளும் தங்கும் இடமாகிய திருமாலின் வயிறுதானோ; யாது உரைப்பாம்—இவற்றுள் எது என்று சொல்வது !

தெள்வார் மழையும் திரை
      ஆழியும் உட்க நாளும்
விள்வார் முரசம் அதிர் மாநகர்
      வாழும் மக்கள்
கள்வார் இலாமைப் பொருள்
      காவலும் இல்லை ; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பாரும்
      இல்லை மாதோ.

அயோத்தியிலே முரசு ஒலிக்கிறது. எப்படி ஒலிக்கின்றது? இடிபோலவா ? கடல் போலவா ? இல்லை; இல்லை. இடியும், கடலும் தோற்று வெட்கம் அடைய வேண்டும். அந்த மாதிரி ஒலிக்கிறது முரசு.

அந்நகர மக்கள் தங்கள் பொருள்களுக்குக் காவல் போடுவது இல்லையாம். ஏன் ? கள்வர் இல்லை, களவாடுபவர்