பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61



மொத்தப் படித்தவர் என்போர் அங்கே இலர் ஏன் ? எல்லாருமே கல்வி வல்லவர். கல்லாது நிற்பவர் எவருமே இலர். அங்ஙனம் இருக்கும் போது ‘இவர் படித்தவர் இவர் படியாதவர்’ என்று சொல்வது எவ்வாறு ?

செல்வம் எல்லாரிடமும் சமமாக இருந்தது. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று இருந்தனர். அதனாலே ஏழையும் இல்லை; பணக்காரரும் இல்லை. இல்லாதவர் என்போர் இலர்; அதாவது பொருள் இல்லாதவர் இலர்; மெத்தப் பொருள் படைத்தவரும் இலர்.

கல்லாது நிற்பர் பிறர் இன்மையின்—கல்வி கற்காமல் வீண் பொழுது போக்கித் திரிபவர் எவருமே இல்லாததால்; கல்வி முற்ற வல்லாரும் இல்லை—மிக்கப் படித்தவர் என்று கூறத்தக்கவர் எவருமே இலர்; அவை வல்லார் அல்லாரும் இலர்—கல்வியில்லாதவரும் இலர். எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே—எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்றிருத்தலாலே; இல்லாரும் இல்லை—செல்வம் இல்லாதவர் எவருமே இலர் உடையாரும் இல்லை—பெரும் செல்வம் உடையார் எவருமே இலர்.

ந்தினை இளையவர் பயில் இடம் மயிலூர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்
சந்தன வனம் அல சண்பக வனமாம்
நந்தன வனம் அல நறை விரி புறவம்