பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


பொருந்திய மகளிரோடு
     வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல் சென்றன்ன
     இயல் இசைப் பயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி
     செவி உற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன
     விழா அணி விரும்புவாரும்

அந்த நகரத்திலே ஒரு புறம் திருமண விழா. ஆண்கள் தாங்கள் விரும்பிய மகளிரோடு மணக்கோலம் பூண்டு இருக்கிறார்கள்.

மற்றொரு புறம் இசை விழா. பருந்தும் நிழலும் போல பக்க வாத்தியங்கள் முழங்க நடைபெறும் இசைக் கச்சேரிகள். இவற்றைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள் அந்த நகர மக்கள்.

இன்னொரு புறம். இலக்கியச் சொற்பொழிவுகள். அமுதினும் இனிய இச்சொற்பொழிவுகளைக் கேட்டு இன்புறுகிறார்கள் மக்கள்.

மற்றொரு புறம் விருந்து உபசாரங்கள். விருந்தினரை வரவேற்று அவர் மனம் குளிர உபசரித்து விருந்தளித்து அன்ன விழா எடுத்த வண்ணம் இருக்கிறார்கள் மக்கள்.

பொருந்திய—மனம் ஒன்றுபட்ட மகளிரோடு—இளம் பெண்களுடனே வதுவையில்—மணக் கோலத்தில்; பொருந்து வாரும்—ஈடுபட்டிருப்பவரும்; பருந்தொடு நிழல் சென்றன்ன—பருந்து பறக்கும் போது அதன் கூடவே நிழலும் தொடர்வது