பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

போல; இயல் இசைப் பயன் துய்ப்பாரும்—பக்க வாத்தியங்கள் தொடர நடைபெறும்; இயல் இசைக் கச்சேரிகளைக் கேட்டு இன்புறு வாரும்; மருந்தினும் இனிய–தேவாமிர்தத்தினும் இனிய; கேள்வி–இலக்கியச் சொற்பொழிவுகளை செவியுற—காது குளிர; மாந்து வாரும்—கேட்டு மகிழ்வாரும்; விருந்தினர் முகம் கண்டு—வரும் விருந்தினர் முகம் கண்டு; அன்ன விழா அணி—சாப்பாடு அளிக்க; விரும்புவாரும்— விரும்புகிறவர்களும்.

𝑥𝑥𝑥𝑥

முந்து முக்கனியின் நானா
      முதிரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர்க் கண்டம் கண்டம்
      இடை இடை செறிந்த சோற்றில்
தம் தம் இல்லிருந்து தாமும்
      விருந் தொடும் தமரினோடும்
அந்தணர் அமுதர் உண்டி
      அயில் உறும் அமலைத்து எங்கும்


அந்த நகர மக்கள் உணவு அருந்தினார்கள். எப்படி அருந்தினார்கள்? ஒரே ஆரவாரம் செய்துகொண்டு உணவு அருந்தினார்கள். எங்கே அருத்தினார்கள்? தம் தம் வீடுகளில் இருந்து உண்டார்கள். தனியாகவா உண்டனர்? இல்லை; இல்லை. சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டனர். அந்தணர்க்கும் தேவர்க்கும் படைத்துப் பின்னரே உண்டனர். மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்து கொண்டு உண்டனர். உணவு எப்படி? சர்க்கரைப் பொங்கல் எத்தகைய சர்க்கரைப் பொங்கல்? நால்வகைப் பருப்பு! வெல்லம்! நிறைய நெய்! எல்லாம் கலந்து செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல்! பிறகு தயிர்சாதம். நல்ல கட்டித் தயிர். சிவந்த கட்டித்-

9