பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

நிலமோ! நிறைந்த விளைச்சல் தரும். சுரங்கங்கள் நல்ல மணிகளைத் தரும். குடி மக்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருந்தார்கள், காரணம் அவர்கள் நல்ல குடியிலே பிறந்தவர்கள்.

𝑥𝑥𝑥𝑥

குடி எலாம்—அந் நாட்டுக் குடிமக்களுக்கு எல்லாம்; நிதியம்—செல்வத்தை கணக்கிலா—அளவில்லாமல்; கலம்—வாணிபம் செய்யும் கப்பல்கள்; சுரக்கும்—கொண்டு வந்து சொரியும். நிலம்—பூமி; நிறை வளம்—நிறைந்த விளைச்சலை; சுரக்கும்—தரும்; பிலம்—சுரங்கங்கள்; நல்மணி—சிறந்த ரத்தினங்களை; சுரக்கும்—அளிக்கும். பெறுதற்கு அரிய— பெறுவதற்கு அரிய; ஒழுக்கம்—நல் ஒழுக்கத்தை; தம் குலம் சுரக்கும்—அவரவர் தம் குலம் அளிக்கும்.

𝑥𝑥𝑥𝑥

தாய் ஒக்கும் அன்பில்
       தவம் ஒக்கும் நயம் பயப்பில்
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு
      செல்கதி உய்க்கு நீரால்
நோய் ஒக்கும் எனில் மருந்து
      ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
      எவர்க்கும் அன்னான்.

இது வரை கோசல நாடு பற்றியும், அந்நாட்டின் தலை நகரான அயோத்தி மா நகர் பற்றியும் கூறினார் கம்பர்.

இப்போது அந்த நாட்டு அரசனைப் பற்றிச் சொல்கிறார். கோசல நாட்டு அரசனாகிய தசரதன் எப்படியிருந்தான்?